2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

20 நாட்களின் பின் கரைசேர்ந்த மீனவர்கள்

Freelancer   / 2021 ஜூலை 12 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

பொத்துவில் அறுகம்பையிலிருந்து கடந்த மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் கரைசேர்ந்துள்ளனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹமட் தாஹா, பொத்துவில் பசறிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய முஹம்மத் ஜாஃபர் என்ற இருவருமே நேற்று அதிகாலை வீடு திரும்பினர்.

மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தால்  கடலில் 14 நாட்கள் தத்தளித்துள்ளனர்.

பின்னர், பெரிய இயந்திரப் படகுகொன்றின் மிதப்பு ஒன்று கிடைத்தாகவும் அதைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் படகில் இருந்தவர்களே தம்மை மீட்டு உணவுகொடுத்து கடற்படையினருக்குத் தகவல் கொடுத்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

அவர்களின் உதவியுடன் தாங்கள் துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் தங்களிடம் வாக்குமூலமும் கையொப்பமும் பெற்றதன் பின்னர் கடற்படையினர் தங்களை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

தம்மைக் காப்பாற்றி கரைசேர்த்த சகோதரமொழி நண்பர்களுக்கும் தம்மைக் காப்பாற்ற முயன்ற அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .