Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
சட்டவிரோத ஆயுதங்களை கல்முனை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருப்போர் அவற்றினை ஒப்படைக்குமாறு தாம் விடுத்த அறித்தலானது, முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானதொன்றல்ல எனவும், தமிழ் மக்களும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தால் அவைகளை தத்தமது கோயில்களில் அவர்கள் ஒப்படைக்க வேண்டுமென தாம் அறிவித்தல் விடுத்துள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்.
கல்முனைப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அதை பொலிஸாரிடம் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலக்கெடுவானது, எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்ககப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனைப் பொலிஸ் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றினை தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்கனவே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
"பள்ளிவாசல்களில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென நீங்கள் விடுத்துள்ள அறிவித்தலை கவனிக்கும்போது, இது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமான அறிவித்தல் போல் தெரிவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த உங்கள் விளக்கமென்ன" என்று அவரிடம் நாம் கேட்டபோதே பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்கவே, கல்முனைப் பொலிஸ் நிலையப் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர், அவைகளை ஒப்படைக்குமாறு நாம் அறிவித்தல் விடுத்திருந்தோம்.
அந்தவகையில், முஸ்லிம் மக்கள் தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களிலும், தமிழ் மக்கள் தமது பகுதிகளிலுள்ள கோயில்களிலும் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென நாம் தெரிவித்திருந்தோம்.
இவ்விடயம் தொடர்பில் பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் நிருவாருகத்தினருடன் ஏற்கனவே நாம் பேசியிருக்கின்றோம்" என்றார்.
52 minute ago
57 minute ago
58 minute ago
mmjesmin Sunday, 03 October 2010 11:00 PM
நல்ல விடயம். உடன் மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு நன்றி. இது ஜெஸ்மின், கல்முனை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
58 minute ago