Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரவணன்)
சம்மாந்துறை, நெய்னாகாடு பகுதியில் அழுகிய நிலையில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இக்கொலை தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும் காரைதீவு விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் சம்மாந்துறையைச் சேர்ந்த இருவர் இக்கொலை தொடர்பில் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் சம்மாந்துறை கீச்சட் ஒழுங்கையைச் சேர்ந்த சுபைறைனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணின் கழுத்தை துணியினால் நெரித்து கொலை செய்த பின், அவரின் 2 வயது குழந்தையின் வாயில் துணியை அடைத்து படுகொலை செய்து ஆற்றில் போட்டதாக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago