Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
நாட்டின் எதிர்காலத்தின் நல்ல பிரஜைகளையும் சிறந்த தலைவர்களையும் உருவாக்கும் உன்னதமான சேவையே ஆசிரியர் தொழிலாகும்.எந்த தொழிலைச் செய்வதென்றாலும் அதற்கு கல்வியை சிறந்த முறையில் முறையாக கற்க வேண்டும். அக்கல்வியை சிறந்த முறையில் முறையாக கற்பிப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.
இதனடிப்படையில் நோக்கும் போது அனைத்து தொழில்களுக்கும் தலையான தொழில் ஆசிரியத் தொழிலாகும். புதிய கல்வித்திட்டத்தின் படி ஆசிரியர்களின் தயவின்றி பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யவும் முடியாது. ஆசிரியர்கள் தங்களை மெழுகு வர்த்தியாக மாற்றிக் கொண்டு மாணவர்களுக்கு ஒளியை வழங்குபவர்களாகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட அரும் பெரும் உண்ணதமான சேவைகளை செய்த ஆசிரியர்களை கௌரவித்து பாராட்டுவதற்காகவே உலக ஆசிரியர் தினத்தை ஒக்டோபர் ஆறாம் திகதி உலகம் முழுவதும் கொண்டடப்படுகிறது.
இதற்கமைய நாளை கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக காலை முதல் மாலை வரை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி உட்பட சேவைப் பாராட்டு நிகழ்வுகளை நடாத்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட், கௌரவ அதிதியாக பிரதி அதிபர் யூ.எல்.எம்.அமீன் உட்பட விஷேட அதிதிகளாக பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
49 minute ago
54 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
55 minute ago