2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நல்லடக்கம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

சம்மாந்துறையில் கடந்த புதன்கிழமையன்று கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அப்பெண்ணினது உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு மட்டக்களப்பு கல்லியங்காடு முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

சம்மாந்துறை நெய்னாகாட்டைச் சேர்ந்த சுபைர் றப்னா என அடையாளம் காணப்பட்ட இப்பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அப்பெண்ணின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு மட்டக்களப்பு கல்லியங்காடு முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவர் கலீல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .