Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கான விசேட செயலமர்வு இன்று வியாழக்கிழமை மாலை கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை பிரதேசத்தில் நடைபெற்று வரும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் குற்றச் செயல்களை எவ்வாறு தடுக்கலாம் என்ற தலைப்பில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கான விசேட செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு கிராமசேவகர் பிரிவுகளில் இருந்தும் 125 பொதுமக்களுடன் கிராம சேவக உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு கல்முனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா, அம்பாறை மாவட்ட பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ்.ஏ.சி.சந்தரசிங்க, அம்பாறை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகஸ்தர் சமன்குமாரே, கல்முனை பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .