2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மருதமுனை பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத் திறன் போட்டி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

விஞ்ஞான ஆய்வுகூட வாரத்தினையொட்டி மாணவர்களின் விஞ்ஞானத் திறனுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் மருதமுனை பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத் திறன் போட்டியொன்று இன்று நடத்தப்பட்டது.

அதற்கிணங்க, இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் ஆக்கத் திறன்களை நேற்றுக் காலை அக் கல்லூரிக்குச் சென்று கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் பார்வையிட்டார்.   

இதன்போது, கல்லூரி அதிபர் அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இணைந்து வருகை தந்திருந்தனர்.

மேற்படி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .