2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்முனை, சாய்ந்தமருதில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.ஜெஸ்மின்)                                

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடந்த இரு வாரகாலமாக வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தின் பிரதான வீதிகளெல்லாம் காபட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளதாலும் முன்னரை விட வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளமையினாலும் வாகன சாரதிகள் போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையினை சரியான முறையில் பின்பற்றத் தவறுகின்றமையாலும் சில வாகன சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதாலும் இவ்விபத்துக்கள் இடம்பெறக்  காரணங்களாகும் என பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இதேவேளையில் சனநெரிசல் அதிகமுள்ள வேளைகளில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைப்பதனையும் சாரதி அனுமதிப் பத்திரமல்லாத எவரிடமும் வாகனத்தை செலுத்த கொடுக்கக்கூடாது எனவும் அளவுக்கதிகமானவர்களை வாகனங்களில் ஏற்றவேண்டாம் எனவும் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .