Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
((யூ.எல்.மப்றூக்)
யுத்தம் முடிந்து சமாதானம் வந்துவிட்டது என - இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். யுத்தமில்லாத நிலை - சமாதான நிலையல்ல. யுத்தம் என்பது இரண்டு பிரிவுகளுக்கிடையில் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், போர் - எங்கள் மத்தியில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசியல், மொழி, இனம், சமய ரீதியாக இந்தப் போர் நடந்து கொண்டிருக்கின்றது என்று மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான கரிட்டாஸ் எஹட் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை பேராசிரியர் ரி.எஸ். சில்வஸ்ரர் தெரிவித்தார்.
உலக உளநல தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையில் உளநலப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உளநல மருத்துவர் வைத்திய கலாநிதி பா. யூடி ரமேஸ் தலைமையில் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அருட்தந்தை சில்வஸ்ரர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவிக்கையில், மனதினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருக்கின்றமையே இவர்கள் பாதிப்படையக் காரணமாகும்.
இவர்களுக்கு நாங்கள் வாழ்வளிக்க வேண்டும். கருணையோடு துடிக்கும் இதயம் வாழ்வளிக்கும் என்பார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் வாழ்வளிக்க விரும்புகின்றோம். அந்த வாழ்வைக் கொடுக்க நாங்கள் கருணையோரு இருக்க வேண்டும். உங்கள் கருணை – குறிப்பிட்ட எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றை மனதில் வைத்துக் கொண்டு, உளநலம் பெறவேண்டியவர்கள் யார் என்று நாம் யோசிக்கும் போது ஒரு உண்மை தெரியவரும்.
முதலில் நீங்களும், நானும் உளநலம் பெறவேண்டும். ஆனாலும், எங்களை விடவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றார்கள். அவர்கள் வீதிகளிலும், மயானங்களிலும், பஸ்தரிப்பிடங்களிலும், இருக்கின்றார்கள். சிலர் - நாம் நினைக்காத வேறுசில இடங்களிலும் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது" என்றார்.
52 minute ago
57 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
58 minute ago