2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தென்கிழக்கு பல்கலை அரசியல் விஞ்ஞான பீடத்தின் சர்வதேச சமாதான நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச சமாதானதின நிகழ்வுகள் நாளை பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பிரிவு கேட்போர் கூடத்திலும் வளாகத்திலும் இடம்பெறவுள்ளன.

கலை கலாசார பிரிவின் பீடாதிபதி எஸ்.எம்.ஆலிப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்துகொள்ள உள்ளார்.

சமாதான விரும்பிகள், சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டோர்களுக்காக பிரார்த்தனை மேற்கொள்ளல் மற்றும் மூவின மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற இருப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .