Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலமுனை - உதுமாபுரம் கிராமத்துக்குள் நேற்று இரவு நுழைந்த யானையொன்று, அங்குள்ள வீடுகள், சுற்று மதில்கள் ஆகியவற்றை உடைத்துச் சேதப்படுத்தியதோடு, நெல் களஞ்சியசாலையொன்றினை உடைத்து அங்கிருந்த நெல்லை உட்கொண்டதாகவும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, உதுமாபுரம் மற்றும் மீனோடைக்கட்டு ஆகிய பகுதிகளுக்குள் அடிக்கடி இரவு வேளைகளில் நுழையும் யானை, கடுமையான சேதத்தினை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து உரியவர்களிடம் முறையிட்டும், எதுவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஒரு யானையே மேற்படி பகுதிகளுக்குள் நுழைந்து இவ்வாறு சேதத்தினை ஏற்படுத்தி வருவதாக மக்கள் கூறுகின்றார்கள்.
இதேவேளை, நேற்றிரவு பாலமுனை – உதுமாபுரம் பகுதிக்குள் யானை நுழைந்ததால், பதற்றமடைந்த பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி பள்ளிவாசலினுள் தஞ்சமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இந்தப் பகுதிகளுக்குள் யானைகள் வருவதானால், வெட்டவெளியிப் பகுதிகளினூடாக சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago