2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி உதவிபெறும் குடும்பத்துக்கு வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 25 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை சிறப்பிக்கும் வகையில், கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை தமிழ் - முஸ்லிம் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உதவிபெறும் குடும்பமொன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் வீட்டைத் திறந்து வைக்க, கல்முனை பிரதேச சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் வீட்டுக்கான சாவியினை வீட்டு உரிமையாளரிடம் கையளித்தார். கல்முனை பிரதேச செயலக சமுர்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .