2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக குப்பைகளை வீசுவதற்கு எதிராக செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

சட்டவிரோதமாக குப்பைகளை வீசுவதற்கு எதிரான சட்டதிட்டங்கள் தொடர்பாக பிரதேசசபை தவிசாளர்கள், செயலாளர்கள், பொதுசுகாதார உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்று சனிக்கிழமை அம்பாறை மொண்டீ உல்லாச விடுதியில் நடைபெற்றது.

திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் 12 பிரதேசசபைகளிலுள்ள பிரதேசங்களில் யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார் , அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்சாத், யுனொப்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் பீற்றர் சுமித், திட்டமுகாமையாளர் செலி மாக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தனர்.

கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், உகண, தெஹியத்தகண்டிய, அம்பாறை போன்ற பிரதேசசபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள், பொதுச்சுகாதார திண்மக்கழிவு எம்.ஏ.நஜீப்,  கிழக்கு மாகாணசபையின் சட்டப் பணிப்பாளர் அனீப் லெப்பை. அம்பாறை பிரதி பொலிஸ் மாஅதிபா, ;காரியாலய சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.புஞ்சிபண்டா, தேசிய வனபரிபாலனசபை மாவட்ட பணிப்பாளர்.எச்.எல்.ஏ.கமகே, தேசிய சுற்றாடல் அதிகாரசபை திட்ட உதவிப் பணவைப்பாளர் கே.பி.அத்தநாயக்கா, ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்துகொணடு பயிற்சிகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .