Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
மாவடிப்பள்ளி பிரதான வீதியில் மாடுகள் நிற்பதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பகல், இரவு வேளைகளில் மாடுகள் மாவடிப்பள்ளி பிரதான வீதியில் நிற்பதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வருகின்ற பயணிகளே விபத்துக்குள்ளாகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, மாவடிப்பள்ளியில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் ஒரு சிலர் மாடுகளைக் கட்டுவதாகவும் இதனால், அப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கோருகின்றனர்.
7 hours ago
7 hours ago
Izam Friday, 03 December 2010 04:04 PM
ரொம்ப தொல்லையாக உள்ளது. இதன் உரிமையாளர்கள் திருந்தினால் சரி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago