2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக விற்கப்படவிருந்த கொக்குகளும் சந்தேகநபரும் கைது

Super User   / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு  விற்பனை செய்யப்படுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆறு வயல் கொக்குகளையும் சந்தேக நபரையும் சம்மாந்துறை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வன பரிபாலன திணைக்கள அதிகாரி டபிள்யு .ஜீ.கீர்த்திசிறியின் பணிப்புரையின் பேரில் வனபரிபாலன உத்தியோஸ்தர்  பீ.யோகேஸ்வரன் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளான நுவான் சிந்தக மற்றும் ஈ.எம்.நந்திக பண்டார ஆகியோர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போதே சந்தேகநபருடன் கொக்குகளும் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X