Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வடிகான்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் துப்புரவு செய்யப்படாதிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நிந்தவூர் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வடிகான்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும்இ ஒரு சில இடங்களில் இன்னும் வடிகான் அமைக்கப்படவில்லை.
இதேவேளை, அமைக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு பல இடங்களில் மூடிகள் போடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
வடிகான்களுக்குள் விழுந்து காயப்பட்டவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், தற்போது மழை பெய்து வருவதனால் வடிகான்கள் நீரினால் நிறைந்து காணப்படுகின்றன. வடிகான்களுக்குள் பல்வேறு கழிவுப் பொருட்கள் மற்றும் மணலும் காணப்படுவதனால்தான் நீர் வடிந்தோடாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதோடு துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பின் கீழ் உள்ள இவ்வடிகான்களை துப்புரவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகான் அமைப்பு வேலைகளில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago