Menaka Mookandi / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய தலைமுறையிலான மனித உரிமை பாதுகாவலர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கத்தினால் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
சர்வதேச மனித உரிமைகள் பிரகணடத்தின் 62ஆவது நூற்றாண்டு தினத்தினை நினைவு கூரும் இத்தினத்தின் பிரதான கருப்பொருள் பாரபட்சங்களை முடிவிற்குக் கொண்டுவருவதற்காகச் செயற்படும் மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் பற்றியதாகும்.
சமகால உலகில் மனித உரிமைகளும் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களும் பல்வேறு நெருக்கடிககை எதிர்கொள்கின்றனர். தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.
வளர்ந்து வரும் மனித உரிமை ஆர்வாளர்களின் செயற்பாடுகள், அரசாங்கச் செயற்பாடுகள் மீது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் பல நாடுகளில் அவ்வேற்பாட்டாளர்கள் மீதும், அவர்கள் சார்ந்த குடும்பங்களின் மீதும் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் என்போர் பாரபட்சம், பலவந்த வெளியேற்றம், அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு எதிராகச் செயற்படுபவர்களாவர். இவர்கள் நீதிக்காக வாதிடுவதுடன் மனித உரிமை மீறல்களுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளுக்காகவும் குரல் கொடுக்கின்றனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது பொறுப்புடமை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பவற்றிற்காகவும் இவர்கள் வாதிடுகின்றனர். எனினும் இச்செயற்பாடுகளின் போது அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இப்பின்னணியில் இன்றை தினத்தின் நோக்கம் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களின் அடைவுகளை மேம்பாடடையச் செய்வதும் அவர்களது சாதனைகளை உலகிற்கு தெரியப்படுத்துவதுமாகும்.
இதன்படி இம்மனித உரிமைப் பாதுகாப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டியதான் அவசியத்தினை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகின்றது.
மேலும் பாரபட்சங்களுக்கு எதிராகச் செயற்படும் புதிய தலைமுறையிலான மனித உரிமைப் பாதுகாப்பாளர்களை உருவாக்குவதற்கான ஒரு தினமாகவும் இத்தினம் விளங்குகின்றது.
இதன் மூலம் 2011 ஆம் ஆண்டு முழுவதும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பணி தொடர வேண்டும் என்பதற்கான செய்தினையினையும் இத்தினம் வெளிப்படுத்துகின்றது.
மனித உரிமைப் பாதுகாப்பாளர்களின் பெருமையினையும் சாதனைகளையும் வெளிக் கொண்டுவருவதன் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய செய்தியினைக் கொண்டு வந்திருக்கும் இத்தினத்தில் இலங்கைத் தீவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயற்படும் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களின் பணிகளையும் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞான சங்கம் மெச்சுவதுடன் அவர்களது பணி மேலும் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த அனைவரும் உறுதிபூண வேண்டும் என வேண்டிக்கொள்கின்றது.
புதிய தலை முறையிலான மனித உரிமைப் பாதுகாவலர்கள் பல்கலைக் கழக மட்டத்தில் உருவாக வேண்டும் எனவும் அதற்கான காத்திரமான முயற்சியில் அனைத்து பல்கலைக் கழக சமூகமும் ஈடுபட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025