2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலியின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆறு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் காவத்தமுனை அல் அஸ்ஹர் விளையாட்டுக் கழகத்திற்கு 45,000 ரூபாவும், மாஞ்சோலை அஸ் -  ஸபா விளையாட்டுக் கழகத்திற்கு 20,000 ரூபாவும், ஓட்டமாவடி ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு 205,000 ரூபாவும், ஓட்டமாவடி யங் சோல்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 20,000 ரூபாவும், மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு 15;,000; ரூபாவும், மீராவோடை அல் ஹிரா விளையாட்டுக் கழகத்திற்கு 15;,000 ரூபா பெருமதியான விளையாட்டுப் பொருட்களும் ஒலி பெருக்கி சாதனமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.மஹ்ரூப் பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X