A.P.Mathan / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை சித்தியடைந்த கல்முனை வடக்குப் பிரதேசப் பாடசாலைகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த - தமிழ், முஸ்லிம் மாணவர்களை பாராட்டிப் பரிசளிக்கும் வைபவமொன்று நேற்று மாலை மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் ஏற்பாடுசெய்த இந்நிகழ்வுக்கு அக்கழகத்தின் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எம்.ஜமீல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜமீல் மற்றும் பரகத் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 53 மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டிப் பரிசளிக்கப்பட்டனர்.
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பாராட்டு வைபவமாக இடம்பெற்ற இந்நிகழ்வினை கழகத்தின் செயலாளர் ஏ.எம்.இப்றாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025