2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் தொடர் மழை; பாதிப்புக்கள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், கரையோரப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் 1300 குடும்பங்களும் 1500 ஏக்கர் நெற்காணிகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் 400 குடும்பங்களும் சாய்ந்தமருது செயலகப் பிரிவில் 5000 குடும்பங்களும் கல்முனை  பிரதேச செயலகப் பிரிவில் 5500 குடும்பங்களும் கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 7000 குடும்பங்களும் முழுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக,பிரதேச செயலாளர்களான ஐ.எம்.ஹனீபா, எஸ்.இராமகிருஷணன், ஏ.எல்.எம்.சலீம், எம்.எம்.நௌபல், கே.லெவநாதன் ஆகியோர்கள் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உறவினர்கள் வீடுகளிலும் பொதுஇடங்களிலும் இடம்பெயருவதுடன், இவர்களுக்கான சமைத்த உணவுகளை பொது அமைப்புக்கள் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் வழங்க முன்வந்துள்ளனர்.


இதேவேளை, இப்பிரதேசங்களை நேற்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்ட  மாவட்ட செயலாளர்; சுனில் கன்னங்கர, இந்த மக்களுக்கு  உலருணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பில்  பிரதேச செயலாளர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X