Super User / 2011 ஜனவரி 27 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மீண்டும் கடும் மழை ஆரம்பித்துள்ளதால், அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தாம் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், கடந்த வெள்ளத்தில் மூழ்கிய நெல்வயல்களில் மனித வளத்தினைக் கொண்டே அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த வெள்ளத்தில் மூழ்கி அம்பாறை மாவட்டத்தில் 11,500 ஹெக்டயர் நெல் வயல்கள் அழிவடைந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்போகத்தில் எதிர்பாக்கப்பட்ட நெற் உற்பத்தியில் 14 வீதம் வெள்ள அழிவின் காரணமாக வீழ்ச்சியடையலாம் என ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால், நாட்டின் தேசிய நெல் உற்பத்தி மேலும் வீழ்ச்சிடையலாம் என அஞ்சப்படுகிறது.
.jpg)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago