Menaka Mookandi / 2011 ஜனவரி 28 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
கல்முனை நெடுஞ்சாலையில் உள்ள கோட்டைக்கல்லாறு கடலேரியை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்பதற்கு மண்ணரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதற்கான மதிப்பீட்டறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெள்ளநீரை கடலுக்குள் வடிந்தோடச் செய்வதற்காக வாவியும் கடலும் சங்கமிக்கும் பகுதியில் கால்வாய் வெட்டப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்து கடல்நீர் கடலேரிக்குள் புகுந்துள்ளமையால் பெரிய அலைகள் ஏற்பட்டு மண்ணரிப்பு ஏற்படுவதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் உட்பட அப்பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயம் என்பன நீரில் மூழ்கும் அபாயம் எற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராசா கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ச், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் கே.மோகனதாஸ், களவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கே.அருள்ராசா சகிதம் நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன் மண்ணரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.
இதன்போது தோலைபேசியூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன் தொடர்பு கொண்டு பாதிப்புகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் மண்ணரிப்பை தடுக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது அமைச்சர் குறித்த பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான செலவு மதிப்பீட்டினை மேற்கொண்டு உரிய அதிகாரிகள் ஊடாக அனுப்பி வைக்குமாறும் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago