2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சமுர்த்தி பணத்தினை சமுர்த்தி வங்கிகளில் வழங்க நடவடிக்கை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்கள் இவ் வருடத்தின் புதிய சமுர்த்தி முத்திரை புள்ளிக்கான பணத்தை மாதாந்தம் சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம் தெரிவித்தார்.

இப் பிரதேசத்தில் சமுர்த்தி நன்மை பெறும் 4850 குடும்பங்களின் சமுர்த்தி முத்திரைக்கான உலர் உணவுப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பெற்றுவந்தனர். இருந்தபோதும் கடந்த சில காலமாக முத்திரைக்கான உலர் உணவுப் பொருட்களை உரிய வேளையில் வழங்காததால் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருவதாக தொடர்சியாக முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து சமுத்தி முத்திரை பெறும் குடும்பங்களின் நலன் கருதி அவர்களின் முத்திரையின் புள்ளிக்கான உலர் உணவுப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மூலம் வழங்காது அம் முத்திரை புள்ளிக்கான பணத்தை மாதாந்தம் சமுர்த்தி வங்கி மூலமாக வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே சமூர்த்தி நலன் பெறும் குடும்பங்கள் ஜனவரி மாதத்தில் இருந்து இவ் வருடத்திற்கான முத்திரைப் புள்ளிக்கான பணத்தை பிரதேசத்தில் உள்ள இரண்டு சமுர்த்தி வங்கி மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை முத்திரைக்கான பணத்தை பெறவிரும்புவோர் பெற்றுக்கொள்வதுடன் சமூர்த்தி வங்கியில் இப்பணத்தை சேமிப்பில் வைக்க விரும்புவோர் சேமிப்பில் வைக்க முடியுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X