2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் இருவர் பலி

Kogilavani   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று இன்று வியாழக்கிழமை காலை கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில்,  திருக்கோவில் வீதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி தணிகாசலம் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் (வயது 43) என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் சின்னத்தம்பி தணிகாசலம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றைய நபரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X