Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 10 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
\
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் விவசாயிகள் இன்று நெல் அறுவடையில் ஈடுபட்டனர். அறுவடையின் போது ஏக்கருக்கு 10 முதல் 15 மூடை வரையான நெல்லே கிடைத்துள்ளதாகவும், இந்த நிலைமையானது தமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
சாதாரண காலங்களில், ஏக்கர் ஒன்றுக்கு 35 முதல் 40 மூடை நெல் அறுவடை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு - ஈரத்தன்மையுடன் காணப்படும் இந்த நெல்லினை ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வது கூட சிரமமான விடயம் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை குறித்து விவசாயியொருவர் கூறுகையில், 'விவசாயத்தில் நாங்கள் தற்போது எதிர்நோக்கியள்ள நிலைமைக்கு நஷ்ட ஈடாக, அரசாங்கம் - விதைநெல் மற்றும் உரம் ஆகியவைகளை நிவாரணமாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இவை எமது நஷ்டத்தை ஈடுசெய்ய போதுமானவையல்ல. எனவே, எனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் அளவின் அடிப்படையில் எமக்கு நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்றார்.
45 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago
mushfika ismail Saturday, 12 February 2011 09:02 PM
ஏக்கருக்கு ஆகக் குறைந்தது 35000 . ௦௦ வாவது கட்டாயம் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட வேண்டும். இப்பணம் ஏப்ரல் மாதத்துக்குள் கொடுப்பது மிக மிக நல்லது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago