Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைபற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலொன்றில் இருவர் காயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், காயமடைந்;தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் நேற்று இரவு 10 மணியளவில் உட்புகுந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த ஆதரவாளர்கள் இருவரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்;.
சரூபுதீன் (வயது 50) என்பவரே படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago