2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அம்பாறையில் 'பணத்திற்காக வேலை' செயற்றிட்டம்

Super User   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை துரிதமாக கட்டியெழுப்ப 'பணத்திற்காக வேலை' எனும் வேலை வாய்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்ப அரசாங்கம் துரிதமாக நடவடிக்கையினை எடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், விவசாயிகளுக்கு அடுத்த போகத்திற்கு தேவையான விதை நெல் மற்றும் உரம் என்பன இலவசமாக வழங்கப்பட்வுள்ளது என பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு இன்று சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.சந்திரசேன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்கிரம, எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், பீ.பியசேன, அனோமா கமகே, கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெவ்வை, ரி.நவரட்னராஜா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .