2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 08 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை வேட்பாளரினுடைய ஆதரவாளர் ஒருவரின் வீடு இனந்தெரியாத குழுவினரால் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் தாக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்திற்கு இடம் வழங்கியவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 4ஆம் இலக்க மாநகரசபை  வேட்பாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீச்சின் உறவினரும் ஆதரவாளருமான ஏ.ஜி.எம்.அஸ்ரி என்பவரது வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் செல்கின்ற வீதியில் மேற்படி வீடு அமைந்துள்ளது.  இந்த வீட்டின் 13 ஜன்னல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனினும் முகமூடி அணிந்த 4 நபர்கள் தாக்கிவிட்டு சென்றமையை அயலவர்கள் அவதானித்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .