2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கழிவு கால்வாயில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

Menaka Mookandi   / 2011 மார்ச் 15 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கழிவு கால்வாயொன்றினுள் தவறிவிழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

திருக்கோவில் நேருபுரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாகவுள்ள கழிவு கால்வாயில் விழுந்தே மேற்படி குழந்தை பலியாகியுள்ளது. வீட்டின் முற்றத்தில் நேற்று மாலை 6 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று அதனது தாயார் தேடிய நிலையிலேயே மேற்படி குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் ஈழவேந்தன் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .