2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாவிதன்வெளி பிரதேச சபை தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏ.ஆனந்தனின் வீடு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்

Super User   / 2011 மார்ச் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏ.ஆனந்தனின் வீடு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அமுர்த்தக்களி பிரதேச கதிர்காமர் வீதியிலுள்ள இல்லமே நேற்று சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 119 இலக்க விசேட பொலிஸ் பிரிவுக்கு தான் அறிவித்ததையடுத்து பொலிஸார் வந்து தனது இல்லதை பார்வையிட்டு பொலிஸிஸ் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தாக ஏ.ஆனந்தன் தெரிவித்தார்.

எனினும் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதனால் தான் வெளியே சென்று முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .