Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 29 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அனர்த்த முகாமைத்துவ சபைக்கு எதிராக சுனாமியினால் பாதிக்கப்பட்ட இறைவெளிக்கண்ட மக்கள் அமைதி போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொண்டனர்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட இந்நிதியத்திற்கு கடந்த 2005ஆம் ஆண்டு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் முயற்சியினால் ஜக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட 25 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
குறித்த பணம் தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்யப்பட்டு தற்போது வட்டியும் சேர்த்து 43 இலட்சம் ரூபா வங்கி வைப்பிலுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நிதியினை இதுவரை மக்களுக்கு பகிந்துகொடுக்கமையினாலேயே இம்மக்கள் அடையாள அமைதி போராட்டத்தை நடாத்தினர்.
இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் இப்போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்தனர்.
கல்முனை அனர்த்த முகாமைத்துவ சபையின் தலைவராக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீரும் செயலாளராக சட்டத்தரணி யூ.எல்.நிசாரும் பொருளாலராக கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் மௌலவி நதீரும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
16 minute ago
24 minute ago
ashraff amra Thursday, 31 March 2011 02:19 AM
ஏழை மக்களின் சாபம் பொல்லாதது .கொடுத்து விடுங்கள். அவர்கள் பசி பட்டினி இன்றி வாழட்டும் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
24 minute ago