2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிரடிப்படையினர் எனக்கூறி இளைஞர்களிடம் கைப்பேசிகள் கொள்ளை; சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையைச் சேர்நதவர்கள் எனக்கூறி அச்சுறுத்தி இளைஞர்களிடம் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளைக் கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர் ஓருவரை நேற்று இரவு கைது செய்ததாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மனை, ஐஸ்வாடி கடற்கரை பிரதேசத்தில் பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டிரந்த இளைஞர்களிடம் 3 பேர் அடங்கிய குழுவினரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அருகிலிருந்த விசேட அதிரடிப்படை முகாமில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சம்பவதினம் இரவு கல்முனை உடையார் வீதியைச்சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்களினால் கொள்ளையிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .