2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்கம்பத்தில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மின்கம்பமொன்றில் மோதி பலியாகியுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அட்டாளைச்சேனை தபாலக வீதியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அமானுல்லாஹ் (வயது 47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு பலியானவர் ஆவர்.

இவர் தனது கடமைமைய முடித்துவிட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திலிருந்து அட்டாளைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளில்  பயணித்துக்கொண்டிருந்தபோதே சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதுண்டு பலியானார்.

இவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .