Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள கிரவல் வீதிகள் பலவற்றை கொங்கிறீட் வீதிகளாக அமைத்துத் தருவதாக கூறி, குறிப்பிட்ட வீதிகளிலுள்ள மண் மற்றும் கிறவல்கள் தோண்டியெடுக்கப்பட்ட பின்னர் அவ்வீதிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக குறித்த வீதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாலும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலையொட்டி அட்டாளைச்சேனையிலுள்ள கிரவல் வீதிகள் பலவற்றை கொங்கிறீட் வீதிகளாக அமைத்துத் தருவதாகக் கூறி, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சில அமைச்சர்கள் வாக்குறுதியளித்து, இதற்கான நினைவுக் கற்களையும் நாட்டிச் சென்றனர். ஆனால், ஒரு மாதம் கடந்த நிலையிலும் இவ்வீதிப் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன.
மேற்படி வீதிகள் சுமார் ஓர் அடிக்கும் அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளதால், அந்த வீதிகளில் தற்போது வெள்ளம் தேங்கியுள்ளது.
இதனால், இவ்வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்ககளின் சீருடை அழுக்கடைவதுடன், இரவு வேளைகளில் பயணிக்கும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, மேற்படி வீதிகளை உடனடியாக கொங்றீட் வீதிகளாக அமைப்பதற்கு உரியவர்கள் கவனமெடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
57 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
bis Wednesday, 27 April 2011 02:18 PM
ஏன் அவசரம் , பொறுக்க முடியாதா அடுத்த தேர்தல் வரைக்கும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago