2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஜேர்மன் தொண்டர் குழு இலங்கை விஜயம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கடந்த கால இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வேறு இடங்களில் மன அழுத்தங்களுக்குள்ளாகி பாதுகாவலர்களின் பராமரிப்பின் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு ஜேர்மன் நாட்டின் தொண்டர் குழு ஒன்று உதவி வருகிறது.

தாம் உதவி புரியும் பிள்ளைகளின் நிலையை பார்வையிட ஜேர்மனில் இருந்து கல்முனை இறவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்திற்கு கேய்கி மற்றும் லீனா ஆகியோர் விஜயம் செய்தனர்.

சுனாமியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 270 பிள்ளைகளை ஷடோ அமைப்பினர் இனம் கண்டு அவர்களுக்கு இத்தொண்டர் அமைப்பின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளாக உதவி வருகின்றனர்.

ஷடோ அமைப்பின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கிரேஷ் ராஜன் மற்றும் சமூக மேன்பாட்டு உத்தியோகத்தர் காண்டீபன் சசிரேகாவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அன்பளிப்புக் கைமாறப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .