Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தனது சம்பளத்தினை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளராக - தான் தெரிவு செய்யப்பட்டால், தன்னுடைய பதவிக்காலத்தில் பெறுகின்ற சம்பளம் முழுவதையும் அட்டாளைச்சேனைப் பெரிய பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக வழங்குவதாக தேர்தல் காலத்தின் போது நசீர் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தார்.
இதற்கிணங்கவே, தனது முதலாவது சம்பளப் பணத்தினை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு நேற்று புதன்கிழமை தவிசாளர் நசீர் வழங்கினார்.
அட்டாளைச்சேனை கூட்டுறவுசங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தவிசாளரிடமிருந்து மேற்படி சம்பளப் பணத்தினை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் சார்பாக அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.ரஷீத் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, தளவிசாளர் நசீர் தனது பதவிக் காலம் முழுவதும் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவினை அட்டாளைச்சேனைப் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
aniffa seyed ibrahim Friday, 29 April 2011 05:30 AM
வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் எல்லாருமே அண்டப்புளுகு, ஆகாயப்புளுகு எல்லாம் புழுகுவார்கள் , ஆனால் அடுத்த வினாடி அவர்களும் மறந்து நாமும் மறந்து விடுவோம்,ஆனால் இவர் சற்று
வித்தியாசமானவர் வாழ்க !வளர்க !!
Reply : 0 0
Ashan Sunday, 01 May 2011 05:49 PM
நல்லதொரு தலைவனுக்கான எடுத்துகாட்டு வாக்குறுதியை காப்பாற்றுவது , அந்தவகையில் நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள். வாழ்க வாழ்க , இன்ஷா அல்லாஹ்' எதிர்கால தலைமை உங்களில் தெரிஹிறது. ஜசகல்லாஹ் ஹேர் . நாரை தக்பீர் அல்லாஹு அக்பர் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago