2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கட்டாரில் இலங்கையர் ஒருவர் மாரடைப்பினால் மரணம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மத்திய கிழக்கு நாடான கட்டாருக்குச் சென்ற இலங்கையர் ஒருவர்  மாரடைப்பினால் நேற்று வியாழக் கிழமை உயிரிழந்துள்ளார்.

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட இஸ்லாமாபாத் கிராமத்தில் வசிக்கும் லத்திப் ஆபிதா தம்பதியினரின் மகனான ஏ.எல்.எம்.ஜனுஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தொழில் புரிவதற்காக கட்டாருக்குச் சென்றுள்ளார்.

இவரின்  ஜனாஸா இன்று ஜும்மாவிற்குப்பின் கட்டார் நாட்டிலிருந்து இலங்கைக்கு இலங்கை தூதுவராலையத்தின் ஊடாக அனுப்பவுள்ளதாக கட்டாரில்  அவர் பணிபுரிந்த டுவேட்டா கம்பனியின் முகாமையாளர் (கபில்) உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

  • kalamkalmunai Saturday, 30 April 2011 01:16 AM

    நன்றிகள் தமிழ் மிரருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .