Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 30 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டம் சம்புக்களப்புப் பிரதேசத்திலுள்ள 08 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் பயன்பெறும் வகையிலான திட்டமெனக் கூறி கடந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வடிச்சல் தோண்டும் நடவடிக்கையானது – கைவிடப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி விவசாயிகள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.
மேற்படி வடிச்சல் தோண்டும் நடவடிக்கையானது, மண் அகழும் - மிதக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மார்ச் 28 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த மண் அகழும் - மிதக்கும் இயந்திம் - கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பல ஆண்டுகளாக, சம்புக்களப்பு பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான நெற் காணிகள் - வடிச்சல் வசதிகள் இல்லாத காரணத்தினால் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வடிச்சல் அபிவிருத்தி வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 100 அடி அகலமும், 08 அடி ஆழமும் கொண்டதாக இந்த வடிச்சல் - கால்வாய் அமையும் என்று கூறப்பட்டது.
ஆயினும், தேர்தல் காலத்தின் போது – மிகவும் வேகமாக இடம்பெற்ற இந்த நடவடிக்கையானது, தேர்தல் முடிந்ததும், திடீரென நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்னவென்று அப்பகுதி விவசாயிகள வினவுகின்றனர்.
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
rifai Sunday, 01 May 2011 02:42 AM
Dont they know why, it is called election time gimmic,these farmers have seen these machines come & go every election time since 1980.
Reply : 0 0
Chanaiuooran Sunday, 01 May 2011 04:50 AM
அட்டளைச்சனைக்கு எம்.பி. ஒன்று கட்டாயம் தருவோம் தருவோம் என்று வாக்குறுதிகளை மாத்திரமே வழங்கி வாக்குகளை பெற்று வெற்றி பெற்று எதுவுமே செய்யாமல் ஏமாற்றியவர்கள் அட்டளைச்சனை இன் அபிவிருக்திக்காக முன்னெடுத்த செயற்பாடுகள் பல அதற்கு தேர்தல் காலத்தில் நன்றி செலுத்த முடியாத மக்களுக்கு ளநறயi ளநiவார என்ன பலன் ??? உதாரனத்திற்கு அக்கரைப்பற்றை பாருங்கள். நன்றி மறவாத மக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago