2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆபாசப்பட இறுவட்டுகளை விற்பனை செய்த மூவர் கைது

Kogilavani   / 2011 மே 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். மாறன்)

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் ஆபாசப்படங்களை இறுவட்டில் பதிவு செய்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வந்த மூவரை நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் ஆபாசப்பட இறுவட்டுகள், கணினி, கையடக்க  தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாருக்க கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்படி வர்த்தக நிலையத்தில் கணினி நிறுவனத்தை  இரவு 9.30 மணியளவில் சோதனையின் செய்தனர். இதன் போது 1200 ஆபாசப் பட இறுவட்டுகள்,  ஒரு கணினி, கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் கடை நடத்துனர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்

இந்த ஆபாசப் பட இறுவட்டுககள்  50 ரூபா தொடக்கம் 100 ரூபாவரையில் விற்பனை செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .