Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 20 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
சாகாமம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறியளவிலான நன்நீர் மீன்குஞ்சு அபிவிருத்தித் திட்டத்தினை அப்பிரதேச மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை சாகமம் பிரதேசத்தில் வைபவ ரீதியாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்துக்கான சமூக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சாகாமம் பிரதேசத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சாகாமம் குளத்திலிருந்து பெறப்படும் சுமார் 10 ஏக்கர் கனவடி அளவான நீர், இந்த நன்நீர் மீன்குஞ்சு அபிவிருத்தித் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தைக் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி, புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago