2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கடும் காற்றினால் நங்கூரமிடப்பட்டிருந்த படகுகள் நீரில் மூழ்கின

Super User   / 2011 மே 21 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை, மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த படகுகள்  நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், மீனவர்களுக்கு பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிரதேச மீனவர்களின் உதவியுடன் கடலில் தாண்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன.

கல்முனை பிரதேசத்தில் படகு இறங்கு துறையொன்று இல்லாமையினால் பெறுமதி வாய்ந்த படகுகளை கரைக்கு  கொண்டு வரமுடியாமல் கடலிலேயே நங்கூரமிடப்படுவது வழமையாகும்.

இதுபோன்று அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பாலும் பலத்த காற்றினாலும்  ஆழ்கடல் மீனவர்களின் படகுகள் கடலில் மூழ்கி சேதமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Arafa Tuesday, 24 May 2011 08:37 PM

    மீனவர்களின் ஒற்றுமை என்றும் நிலையானது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .