Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 26 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
உலக உணவு நிகழ்ச்சித் திட்ட மென் வேலைத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று 5 ஆம் கட்டை அஷ் சிபாயா வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கையொன்று இன்று இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் வழி நடத்துதலுடன் இடம்பெற்ற இந்த வேலைத் திட்டத்தில் 230 பேர் பங்கு கொண்டனர்.
இந்த சிரமதானத்தில் பங்கு கொண்ட 230 பேருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குமென மொத்தமாக 1151 பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல். அபுல் ஹசன் தெரிவித்தார்.
வறுமைக் கோட்டின் கீழுள்ள பொதுமக்கள் மேற்படி மென் வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டு தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் 26 இலகு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் 20 வேலைத் திட்டங்கள் நிறைவடைந்து விட்டதாகவும் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர் எம்.ஐ. சலீம் தெரிவித்தார்.
மேற்படி 26 வேலைத் திட்டங்களிலும் கலந்து கொள்ளும் பயனாளர்களுக்கு வழங்குவதற்கென உலக உணவுத் திட்டமானது அரிசி 72 ஆயிரத்து 930 கிலோகிராம், பருப்பு 10 ஆயிரத்து 950 கிலோகிராம், சீனி 3 ஆயிரத்து 650 கிலோகிராம் தேங்காய் எண்ணெய் 3 ஆயிரத்து 650 கிலோகிராம் ஆகியவற்றை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளது.
அக்கரைப்பற்று 5 ஆம் கட்டை அஷ் சிபாயா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இன்றைய இலகு வேலைத் திட்டத்தை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், உலக உணவுத் திட்டத்தின் அம்பாரை மாவட்ட பிராந்திய காரியாலய தலைவி மற்றும் உத்தியோகத்தர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago