Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 22 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சிலர் சட்டவிரோதமாக மூடிவருவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்துக்குச் நேற்று செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டபோதே தவிசாளர் நஸீர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைக் கிராமத்தை கிடையாக ஊடறுத்துச் செல்லும் மேற்படி கோணாவத்தை ஆறானது இப்பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை நிலத்தின் மேலதிக நீரை கடலுடன் கொண்டு செல்வதற்கான வடிச்சலாகப் பயன்பட்டு வருகிறது.
அதேவேளை, நூற்றுக் கணக்கான மீனவர்கள் தமது ஜீவனோபாயத்துக்காக இந்த ஆற்றில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர் வரையிலான அகலத்தினையும் 04 கிலோமீற்றர் நீளத்தினையும் கொண்ட இந்த ஆற்றின் இரு பக்கத்தினையும் சிலர் சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்பி, குடியிருப்பு நிலங்களாகவும், தோட்டங்களாகவும் மாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பிருந்து ஆற்றின் குறிப்பிட்டதொரு பகுதிகளை சிலர் மண்ணிட்டு நிரப்பி வருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த முறைப்பாட்டினையடுத்தே அட்டாளைச்சேனை தவிசாளர் நஸீர் தலைமையிலான குழுவினர் குறித்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
36 minute ago
38 minute ago
42 minute ago
45 minute ago
Hassan Wednesday, 22 June 2011 10:53 PM
இவர்களை திருத்த முடியாது
Reply : 0 0
mam.fowz Thursday, 23 June 2011 12:22 AM
மினோடகட். டாக்ஸ்ட, தொடக்கம் (இறட்டத்து காப்பு.) இருந்து முகத்துவாரம் வரைக்கும் அன்று இருந்த ஆறு இப்போது வாய்கால் போன்று இருக்கு. எப்பொழுது திருந்துவார்கள்? பாவம் விவசாய்கள்!!
Reply : 0 0
mohamed jaleel Thursday, 23 June 2011 12:34 AM
இது தேவைதானா? இருக்கிறதை வைத்து பிழைக்க தெரியதாவர்கள் தான் இப்படி ஆசைபடுவது. இது நல்லதுக்கு இல்லை.
Reply : 0 0
Unkalodu Ullavan Thursday, 23 June 2011 03:34 AM
தம்பிகளே இந்த கோணவத்தை எத்தனையாம் ஆண்டு ராசா வந்த, அதுட நோக்கம் என்ன?
Reply : 0 0
risath Thursday, 23 June 2011 01:26 PM
இது விடயத்தில் தவிசாளர் நல்ல ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பார் என மக்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் . அதை அவர் செய்யட்டும் .
Reply : 0 0
hafeel ahamed Thursday, 23 June 2011 07:32 PM
உங்கள் சேவை இனிதே தொடரட்டும்.
Reply : 0 0
nanpan slm Thursday, 30 June 2011 04:16 AM
ஊரார் சொத்துக்கு ஆசைப்படும் ஆசாமிகளுக்கு தண்டனை கிடைக்கும். இவர்கள் செத்ததும் ஐந்தே சொத்துக்களும் அவர்களுடன் சென்று விடும் என்ற நப்பாசைதான் இதுக்கு காரணம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
42 minute ago
45 minute ago