2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாலமுனை பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

A.P.Mathan   / 2011 ஜூன் 26 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலமுனை பகுதியில் டெங்கு ஒழிப்பு தொடர்பான சிரமதானப் பணி மற்றும் ஊர்வலம் ஆகியவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.

அக்கரைப்பற்று பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவும், பாலமுனை முதலாம் பிரிவு கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுவும் இணைந்து மேற்படி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நடத்தின.

ஜனாதிபதி செயலணியின் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சிரமதானம் மற்றும் ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம்.ஜெஸீல், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி ஊர்வலத்தின் போது, டெங்கு ஒழிப்பு தொடர்பான ஸ்டிக்கர்கள் வீடுகளில் ஒட்டப்பட்டதோடு, அந்த நோய் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X