Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 01 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மது மற்றும் பணம் போன்றவைகளுக்காக நாகரீகமற்றவர்களையெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ததன் விளைவு தான் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தாக்கப்பட்ட சம்பவமாகும் என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தெரிவித்தார்.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாசிம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் என்போர் நமது குழந்தைகளின் கல்வியிலும் எதிர்காலத்திலும் அக்கறை கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருபவர்களாவர். இவ்வாறான கௌரவத்துக்குரியவர்கள் மீது காடைத்தனமாக தாக்குதல் மேற்கொள்வதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மக்களுக்கு நன்மை தரும் காரியங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கிண்ணியா பிரதேசசபைத் தவிசாளரின் மேற்படி நடடிக்கையானது அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் அந்தப் பிரதேசத்துக்கும் அபகீர்த்தியையும் வெட்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் தமக்குக் கிடைக்கும் அதிகாரத்தினை பிழையாகப் பயன்படுத்துவதும் அந்த அதிகாரத்தினூடாக சுயவிருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்வதும் தமக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். கிண்ணியா பிரதேசசபைத் தவிசாளர் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அப்படியானதொரு துரோகத்தினைத்தான் இழைத்துள்ளார்.
மேலும், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மீதான தாக்குதல் சம்பவத்தினூடாக மக்களும் ஒரு விடயத்தினைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பணத்தையும் மதுபானத்தையும் வைத்து தேர்தல் செய்து அதில் வெற்றி காண்பவர்களெல்லாம் நமது பிரதிநிதிகளாக வரும்போது இவ்வாறான சம்பவங்களும் அவமானங்களும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே நேர்மையானவர்களையும் நற்பண்புள்ளோரையும் தம்முடைய பிரதிநிதிகளாக மக்கள் தெரிவு செய்தல் அவசியமாகும்.
இதேவேளை, மேற்படி சம்பவத்தினால் - வேறு பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினைச் சேரந்த ஆசியர்களும் கல்வி அதிகாரியும் இனிமேல் கிண்ணியாப் பிரதேசத்துக்குச் சென்று கடமையாற்றுவது தொடர்பில் அச்சப்படுவார்கள். ஒரு வலயக் கல்விப் பணிப்பாளருக்கே அங்கு கடமையாற்ற முடியவில்லை என்றால், தாம் - அங்கு சென்று எவ்வாறு பணி செய்வதென அவர்கள் கேட்பார்கள். இதற்கு யார் பதில் கூறுவது? என அவர் வினாவினார்.
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago
IBNU ABOO Saturday, 02 July 2011 03:13 AM
எங்கள் பிரதேசத்தை சேர்ந்த ஒரு உயர் கல்வி அதிகாரி தாக்கப்பட்டதற்கு அப்பிரதேசத்தை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ கண்டனக்குரல் எழுப்பவில்லை. ஏனென்றால் எதிர்கால அரசியல் லாபத்துக்காக. ஆனால் நியாத்தை எடுத்துப் பேசினாரே பியசேன பொடி அப்பு எம்பி. இவரை போன்றவர்கள்தான் நிஜமான மக்கள் பிரதிநிதிகள் . அவருக்கு என்றும் எம்பியாயிருக்க வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago