Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 01 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
பொத்துவில், பாணமை களப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்கு கடற்படையினர் தடை விதித்ததை அடுத்த அப்பகுதி மக்களால் பாரிய வீதி மறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் தங்களது படகுகள் மற்றும் தோணிகளை வீதிக்கு குறுக்காக வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாணமை களப்பு மற்றும் அதனையண்டிய கடல் பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடற்படையினர் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து சூழல் பாதுகாப்பு அமைப்பு கடற்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணிக்கு பாணமை ஸ்ரீ போதி ருக்காராமய விகாரையில் இருந்து பிரதான வீதியூடாக நகர்வரை சென்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களப்பு பகுதியிலிருந்து கடற்படையினரின் படகுகள் வெளியேற்றப்பட வேண்டும், பொதுமக்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட வேண்டும், சுற்றுலா பகுதிகளில் கடற்படை முகாம் அமைக்கக்கூடாது போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைக்கான தீர்வு கி;ட்டாமல் அங்கிருந்து நகர மறுத்தனர். இதனையடுத்து கடற்படையினருடன் இராணுவ அதிகாரி, மீனவ சங்கத் தலைவர், விகராதிபதி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கடற்படையினர் தாம் மீன்பிடிக்க அனுமதிப்பதாகவும் களப்பிலிருந்து தமது படகுகளை அகற்றுவதாகவும் புதிய முகாங்கள் அமைக்கப்படமாட்டாது எனவும் வாக்குறுதியளித்தனர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago