2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கல்முனை செயற்குழு நிர்வாகிகளுக்கான கூட்டம்

Kogilavani   / 2011 ஜூலை 19 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கல்முனை செயற்குழு நிர்வாகிகளுக்கான கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு கல்முனைக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்,  வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சி.முபீத்  உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 

    

 


  Comments - 0

  • Dean Wednesday, 20 July 2011 12:08 AM

    அடடா சின்னப் பசங்களையும் செயற்குழுவில் சேர்த்து இருக்காங்கப்பா! வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    vaasahan Wednesday, 20 July 2011 08:15 PM

    தேர்தலுக்கு நிற்பது என்னவோ நல்லதுதான். ஆனால் கல்முனையில் எல்லாப் பருப்பும் வேகுறது கஷ்டமே. சரி ஆகட்டும் பார்க்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X