2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஜூலை 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலிருந்து அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய ரீதியாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சிவப்பிரகாசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு நடைபெற்ற தேசிய கூட்டுறவு தின விழா நிகழ்வில் நடனப்போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்றுக்கொடுத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Razanamanaf Thursday, 21 July 2011 07:40 PM

    இன்னும் பல துறைகளில் முன்னேறி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அந்த மாணவர்களுக்கு .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X