Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூலை 23 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது கொம்டெக் கல்வியகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டில் வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறியினை பூர்த்தி செய்த பட்டதாரி மாணவர்கள், கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றுவதற்காக கல்வியகத்தில் கற்கை நெறியினை தொடர்ந்த 400 மாணவர்களுக்குமான கௌரவிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை கொம்டெக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொம்டெக் கல்வியகத்தின் சிரேஷ்ட பதிவாளர் எம்.எம்.ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.அஸ்றப், கணக்கியலும் நிதியும் துறைசார் தலைவர் கலாநிதி ஏ.ஜௌபர், மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.சிராஜ், இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.நைசர் மற்றும் விரிவுரையாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
2010 ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் கொம்டெக் கல்வியக்திலிருந்து 33 பேர் கலைப்பிரிவிலும் ஒருவர் வர்த்தக முகாமைத்துவத்திலும் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago