Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
சமுர்த்தி வேலைத்திட்டம் 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும்போது 28.5 வீதமாக காணப்பட்ட இலங்கையின் வறுமை நிலையானது 2010ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 8.9 வீதமாக குறைவடைந்ததாகவும் இதற்குக் காரணம் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டமும் அதற்காக பணிபுரிந்த உத்தியோகத்தர்களுமே என அம்பாறை மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வறுமையொழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நான்கு வகையான நிகழ்வுகளைக் கொண்டதாக நடைபெற்ற இந்த வைபவத்தில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்குதல், வறியோர்களுக்கான 'திரிய பியச' வீடுகள் கையளித்தல், வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் கையளித்தல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களாக கடமையாற்றிய காலத்தினை அவர்களின் நிரந்தர சேவைக்காலத்துடன் இணைக்கும் சான்றிதழ்கள் கையளித்தல் ஆகியன நடைபெற்றன.
சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், விசேட அதிதியாக மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் ஐ.அலியார்; கலந்து கொண்டனர். அத்துடன் சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
32 minute ago
38 minute ago
47 minute ago
57 minute ago
rifaydeen jamaldeen Tuesday, 18 October 2011 08:09 PM
நல்லது..
Reply : 0 0
ar.nila Wednesday, 19 October 2011 01:13 AM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
47 minute ago
57 minute ago